இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Suryakumar Yadav அதிகபட்சமாக 53 ஓட்டங்களை பெற்றதுடன், Hardik Pandya 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Fazalhaq Farooqi மற்றும் Rashid Khan ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Azmatullah Omarzai 26 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் Jasprit Bumrah மற்றும் Arshdeep Singh தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.