Tuesday, July 23, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு30 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

30 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹாகிவுல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று 30 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து இன்று (20) விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்து மீகஹாகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

மீகஹாகிவுல, பொல்கஹராவ பிரதேசத்தை சேர்ந்த 40-60 வயதுக்குட்பட்ட நால்வரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு மாற்றுத்திறனாளிகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

மீகஹாகிவுல நகரில் இருந்து பொல்கஹராவ கிராமத்தை நோக்கி பயணித்த டீசல் முச்சக்கரவண்டி 30 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனைக்கு முற்றுப்புள்ளி

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உரிமையை மாற்றுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்த விலைமனு கோரும் நடவடிக்கையை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது...

Keep exploring...

Related Articles