Friday, June 19, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு30 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

30 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹாகிவுல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று 30 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து இன்று (20) விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்து மீகஹாகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

மீகஹாகிவுல, பொல்கஹராவ பிரதேசத்தை சேர்ந்த 40-60 வயதுக்குட்பட்ட நால்வரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு மாற்றுத்திறனாளிகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

மீகஹாகிவுல நகரில் இருந்து பொல்கஹராவ கிராமத்தை நோக்கி பயணித்த டீசல் முச்சக்கரவண்டி 30 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles