Friday, November 15, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிள்ளைகளுக்கு உகந்த நாட்டை உருவாக்குவேன் - ஜனாதிபதி

பிள்ளைகளுக்கு உகந்த நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி

ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளதாகவும், இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மக்களுக்கு வருமானம் வழங்குவதற்காக ‘அஸ்வெசும’ வேலைத்திட்டமும் காணி உரிமையை வழங்க உறுமய வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, பிள்ளைகளுக்கு கல்விஅறிவை வழங்குவதற்காக ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டில் (2023), உயர் தரம் கற்கும் 60 மாணவர்களைத் தெரிவு செய்து 100 வலயங்கள் உள்ளடங்கும் வகையில் ஒரு மாணவருக்கு மாதாந்தம் 6 000 ரூபா வீதம் 6000 மாணவர்களுக்கு 02 வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கு அமைய, நாடளாவிய ரீதியில் 10,126 பாடசாலைகளை உள்ளடக்கி தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பாடசாலைக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச புலமைப்பரிசில் 04 என்பதோடு அதிகபட்ச புலமைப்பரிசில் 22 ஆகும். ஏப்ரல் 2024 முதல் 12 மாதங்கள் வரை, ஒரு மாணவருக்கு மாதம் ரூ.3000/- வீதம் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் இன்று 5108 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில மாணவர்களுக்கு அடையாளமாக புலமைப் பரிசில்களை வழங்கினார்.

புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்களின் விபரங்களைக் கேட்டறிந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles