Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறி - பௌசர் விபத்து: ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்

லொறி – பௌசர் விபத்து: ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியொன்று எரிபொருள் பௌசருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை – பலுகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து இன்று (20) அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மரக்கறி லொறியின் சாரதியும், உதவியாளருமே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மரக்கறி லொறி யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற போது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பௌசரின் பின்புறம் மோதி வீதியின் குறுக்கே கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரக்கறி லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே இவ் விபத்துக்கு காரணம் என விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles