Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபியுமி ஹன்சமாலியின் சொத்து மதிப்பு குறித்து விசாரணை

பியுமி ஹன்சமாலியின் சொத்து மதிப்பு குறித்து விசாரணை

நாட்டிலுள்ள 08 முக்கிய வங்கிகளினால் பராமரிக்கப்பட்டு வரும் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சந்தேகத்திற்கிடமான முறையில் சம்பாதித்ததாக கூறப்படும் பிரபல மொடல் பியுமி ஹன்சமாலியின் 19 கணக்குகளின் பதிவுகளை சமர்ப்பிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று இரகசிய பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களின் கோரிக்கையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

‘மகெனே பராய்’ அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்த செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் ராஜகருணா மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் தரங்க லக்மால் ஆகியோர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.

கொழும்பு ஹில்டன் குடியிருப்பில் வசிக்கும் பியூமி ஹன்சமாலி 800,000 ரூபா பெறுமதியான ரேஞ்ச் ரோவர் காரையும், கொழும்பு 7 இல் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் 148 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீட்டையும் வாங்கியுள்ளதுடன், 8 பெரிய வங்கிகளில் பராமரிக்கப்பட்ட 19 வங்கி கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை குறுகிய காலத்தில் வைப்பில் இட்டமை தொடர்பில் சோதனை நடத்தப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles