Sunday, May 4, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதியின் கவனயீனத்தால் விபத்துக்குள்ளான கார்

சாரதியின் கவனயீனத்தால் விபத்துக்குள்ளான கார்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணித்த கார் ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற குறித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (19) அதிகாலை 5.15 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன், குயில்வத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாரதி நித்திரை கொண்டதால், கார் வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டம் நோக்கி சென்றமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், கார் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles