Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடொன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு

வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு

இபலோகம பிரதேசத்தில் வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (17) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புஞ்சிக்குளம், இபலோகம பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய இரேஷா மதுமாலி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழக்கும் போது ஒரு குழந்தை மட்டுமே அங்கு இருந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles