Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்ஜப்பானில் பரவும் கொடிய பக்டீரியா - உயிரைக் கொல்லும் அபாயம்

ஜப்பானில் பரவும் கொடிய பக்டீரியா – உயிரைக் கொல்லும் அபாயம்

‘குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ்’ எனப்படும் இறைச்சியை உண்ணும் அரிதான பக்டீரியா ஜப்பானில் பரவி வருகிறது.

இந்த பக்டீரியா தொற்றை கவனிக்காமல் விட்டால், இரண்டு நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த பக்டீரியாவினால் இதுவரையிலும் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் பக்டீரியா 1999ல் ஜப்பானில் கண்டறியப்பட்டது.

இந்த வகை தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி பழகுபவர்களுக்கும், அவர்களுடன் உணவு மற்றும் பானங்களை பகிர்ந்து உண்பவர்களுக்கும் எளிதில் பாதிப்பு ஏற்படுவதாக ஜப்பான் தொற்று நோயியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த வகை பக்டீரியா தொற்று பொதுவாக வீக்கம் மற்றும் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது.

மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சினைகள், உறுப்பு செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது ஜப்பானில் பக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000த்தை நெருங்கியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட அதிகம் என அந்நாட்டு தேசிய தொற்று நோயியல் மையம் தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles