வரியின்றி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரையோரப் பொலிஸாரின் கொழும்பு 10 பகுதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு இலட்சத்து இருபதாயிரம் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 10 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 32-45 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைக்காக கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.