Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உலகம்தாய்லாந்தில் இரட்டை குட்டிகளை பிரசவித்த யானை

தாய்லாந்தில் இரட்டை குட்டிகளை பிரசவித்த யானை

மத்திய தாய்லாந்திலுள்ள அயுதயா யானைகள் சரணாலயத்தில் ஆசிய யானையொன்று அரிய வகை இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவொரு அதிசய நிகழ்வென அங்குள்ள பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

36 வயதான சாம்சூரி என்ற யானை இரட்டைக் குட்டிகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை ஆண் குட்டியை ஈன்றெடுத்தது. அத்துடன் அதற்கான பிரசவம் முடிந்துவிட்டதாக நினைத்துள்ளனர்.

முதல் குட்டியை கழுவி சுத்தம் செய்து, தாய் யானையின் காலடியில் நிக்க வைக்க முயலும்போது பலத்த சத்தம் கேட்டுள்ளது. அப்போது சாம்சூரிக்கு இரண்டாவது பெண் குட்டி யானை பிறந்துள்ளது.

இரண்டாவது பிரசவத்தின்போது தாய் யானை சற்று பீதியில் ஆழ்ந்ததால், ஈன்ற பெண் குட்டியை மிதித்து விடாமல் பராமரிப்பாளர்கள் காக்க வேண்டியிருந்தது. இந்தக் குழப்பத்தில் ஒரு பராமரிப்பாளர் காயமடைந்தார்.

யானைப் பிறப்புக்களில் இரட்டைக் குட்டிகள் என்பது மிகவும் அரிது. அதிலும் ஒரு ஆண் மற்றும் பெண் என்பது அரிதிலும் அரிதானது சேவ் தி எலிஃபண்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் உட்பட பூங்காவை பார்வையிட வருபவர்களுக்கு யானைக் குட்டிகளைப் பார்ப்பதற்கு அனுமதியுண்டு. ஆனால், அவர்களின் பாதணிகளை கழற்றி வைத்து விட்டு, கைகளை நன்றாகக் கழுவிவிட்டே உள்ளே வர வேண்டும்.

அங்கே ‘யானைக் குட்டிகளை தொட வேண்டாம்’ என்று பலகையில் எழுதப்பட்டிருக்கும்.

பிறந்து ஏழு நாட்களின் பின்னரே யானைக் குட்டிக்கு பெயர் வைக்கப்படும்.

இரண்டாவதாக பிறந்த பெண் யானைக்குட்டி 55 கிலோகிராம் எடை கொண்டது. ஆண் யானைக் குட்டி 60 கிலோகிராம் எடை கொண்டது.

Keep exploring...

Related Articles