தபால் ஊழியர்கள் நேற்று (12) நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, நேற்று (12) நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று (13) நள்ளிரவு 12.00 மணி வரை பணிப்புறக்கணிப்பு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.