Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமி தாக்கப்படும் வீடியோவை வெளியிட்ட இளைஞனுக்கு சன்மானம்

சிறுமி தாக்கப்படும் வீடியோவை வெளியிட்ட இளைஞனுக்கு சன்மானம்

முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியில் 4 சிறுமி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவத்தை வீடியோ எடுத்து அதை வெளியிட்ட தருஷ சந்தருவன் கொடிகார என்ற இளைஞன் கௌரவிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட குறித்த வீடியோவால் குகுல் சமிந்த என்ற சந்தேகநபர் பொலிஸாரினால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், சந்தேகநபரான குகுல் சமிந்த என்ற சந்தேகநபர், சிறுமியை தாக்கும் வீடியோவை பதிவு செய்த இளைஞன் இன்று பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டு, அந்த இளைஞனுக்கு 5 லட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரினால் இந்த பணம் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles