குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஏற்பிட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதனால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு குவைத்திலுள்ள மங்காப் (Mangaf) மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்திலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.