Wednesday, August 20, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக குழு நியமனம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக குழு நியமனம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக ஓய்வுபெற்ற நீதிபதி A.N.J.D.அல்விஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில் முதலில் கிடைத்த புலனாய்வுத் தகவல், அது தொடர்பில் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் குழுவினூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனிடையே, இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மட்டக்களப்பு – வவுணதீவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் LTTE அமைப்பு தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபையின் வௌிக்கொணர்வு குறித்தும் இந்த குழுவினால் விசாரணை செய்யப்படவுள்ளன.

இவை தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தம்மிடம் கையளிக்குமாறு ஜனாதிபதியினால் குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles