இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடற்கரையில் ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக, இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலாட் தீவுகளின் வடமேற்கே 41 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் 32 கிலோமீற்றல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.