கொட்டாவ, மாக்கும்புர அதிவேக நெடுஞ்சாலை மாற்றுப் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று இன்று (12) காலை பேருந்து நிறுத்தத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்கவில் இருந்து கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குச் செல்ல முற்பட்ட போது, பேருந்தின் பிரேக் செயலிழந்ததால், சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பேருந்துடன் பேருந்து மோதியுள்ளது.
விபத்தில் பேருந்து நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.