பூனாகல வனப்பகுதியில் நேற்று (11) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொஸ்லந்த, பூனாகல வனப்பகுதியின் கீழ் பகுதியில் ஆரம்பித்த இந்த தீ இன்று (12) காலை வரை பரவி வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீப்பரவலினார் பூனாகல வனப்பகுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.