கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை பாரியளவில் கடத்தி சென்ற யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கை தொடர்பில் விசேட அதிரடிப்படை கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகத்துரே பகுதியில் நேற்று (10) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பாரியளவிலான போதைப்பொருட்களுடன் கல்முரு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 70 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியான 28 கிலோகிராம் 310 கிராம் கேரள கஞ்சா மற்றும் 10 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்காக அவர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.