மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) உள்ளிட்ட 9 பேர் பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
51 வயதான சிலிமா நேற்று (10) காலை தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்டதாக மலாவி ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
ரேடார் அமைப்பில் இருந்து விமானம் காணாமல் போனதையடுத்து, விமானத்துடன் தொடர்பை ஏற்படுத்த விமான அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.