Friday, January 30, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த வாரம் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

அடுத்த வாரம் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசொன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள 11 பாடசாலைகளுக்கு இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி அநுராதபுரம் உயர்தரப் பாடசாலை, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர உயர் பாடசாலை, நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய உயர் பாடசாலை, தேவனம்பியதிஸ்ஸ புர உயர் பாடசாலை, மகாபோதி உயர் பாடசாலை, மிஹிந்தலை உயர் பாடசாலை, மிஹிந்தலை கம்மலக்குளம கல்லூரி மற்றும் தந்திரிமலை ஆகிய கல்லூரிகள் மூடப்படவுள்ளன.

விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அந்த பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் தேசிய பொசன் விழா குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles