மொரகஹஹேன பகுதியில் அமைந்துள்ள சப்ரகமுவ அபிவிருத்தி வங்கியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.