வீரகுல பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் வியாபாரியுமான கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்பஹா நீதவான் சிலானி பெரேராவினால் இன்று (10) பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமையவே கணேமுல்ல சஞ்சீவ எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படவுள்ளார்.
‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.