பொல்கஸ்ஓவிட்ட – மத்தேகொட பிரதேசத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் 5,200 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை – வேவல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கஹதுடுவ, தெபுவன மற்றும் மத்துகம பிரதேசங்களில் இருந்து திருடப்பட்ட மேலும் 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.