தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 15,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிக பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய சேவைகள் திணைக்களத்தின் கணக்கீட்டின் பின்னர் பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது