புத்தல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
புத்தல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் பசறை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹிகுருகடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகஸ்லந்த வீதியில் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 19 கிராம் 630 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஹிகுருகடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.