பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
17ஆவது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த நிலையில் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அவர் கையளித்தார்.
புதிய அமைச்சரவையை பதவியேற்கும் வகையில் அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
294 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.