செய்திகள்உள்நாட்டுவெள்ளத்தை பார்க்க சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கி பலி

வெள்ளத்தை பார்க்க சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கி பலி

வெள்ளத்தை பார்ப்பதற்காக படகு ஒன்றில் 20 பேர் கொண்ட குழு ஒன்று சென்ற போது குறித்த படகு உயர் மின்கம்பியில் மோதியதில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனையோர் உயிர் தப்பியதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

புலத்சிங்கள திவலகட பிரதேசத்தைச் சேர்ந்த லொகு சின்ஹாரச்சிகே தமித் குமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்த இளைஞன் சுமார் இருபது பேர் கொண்ட குழுவுடன் நேற்று (03) மாலை வெள்ளத்தைப் பார்ப்பதற்காக படகில் சென்று கொண்டிருந்தார்.

குறித்த குழுவினர் பயணித்த படகை உயிரிழந்த இளைஞன் ஓட்டிச் சென்றதுடன், துடுப்பை ஏந்திய போது, அது உயர்நிலை மின்கம்பியில் மோதியதில் அவர் வெள்ளத்தில் விழுந்துள்ளார்.

படகில் இருந்தவர்களும் மின்சாரம் தாக்கி படகிற்குள் விழுந்ததாகவும், ஆனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles