Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதைக்கு அடிமையான மகனை மீட்க பொலிஸாரை நாடிய தாய்

போதைக்கு அடிமையான மகனை மீட்க பொலிஸாரை நாடிய தாய்

போதைக்கு அடிமையான மகனை , போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவரே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும். அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் அவர் கோரியுள்ளார்.

அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles