Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் வரி செலுத்தாது இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து நேற்று (02) கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 2இ400 மான்செஸ்டர் ரக சிகரெட்டுகளை வைத்திருந்த கொச்சிக்கடை, குருகேவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைக்காக அவர் கொச்சிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles