Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமன் கொல்லாவின் உதவியாளர் ஐஸுடன் கைது

சமன் கொல்லாவின் உதவியாளர் ஐஸுடன் கைது

அம்பலாங்கொட பிரதேசத்தில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான சமன் கொல்லாவின் உதவியாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாங்கொடை – காலி வீதியின் வெனமுல்ல பிரதேசத்தில் நேற்று (02) சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, அம்பலாங்கொடை பிரதேசத்தில் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான சமன் கொல்லாவின் உதவியாளரான குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

குளிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 08 கிராம் 140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles