Sunday, August 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினசரி முட்டை நுகர்வு ஒரு மில்லியனால் அதிகரிப்பு

தினசரி முட்டை நுகர்வு ஒரு மில்லியனால் அதிகரிப்பு

நாட்டில் தினசரி முட்டை நுகர்வு சுமார் ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

எமது நாட்டில் தினசரி முட்டை நுகர்வு 07 மில்லியன் முட்டைகளாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களில் அந்த அளவு 08 மில்லியனை தாண்டியுள்ளதாக திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சியின் காரணமாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களாலும் குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவு முட்டை என்பதால் அதன் நுகர்வு அதிகரித்துள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles