Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்உலகம்பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது

பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது

பிரித்தானிய பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து உரிய காலத்திற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தும் பிரித்தானிய பிரதமரின் தீர்மானத்திற்கு கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles