நீண்டகாலமாக பூஸ்ஸ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் விசேட அதிரடிப்படையின் குழுவொன்று நேற்று (29) ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லபட, பூஸ்ஸ பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
இதன்போது, 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மேற்படி நபர் கைது செய்யப்பட்டார்.
பூஸ்ஸ, வெல்லபட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
அவரிடமிருந்து 101,000 ரூபா ரொக்கப் பணமும், 02 கையடக்கத் தொலைபேசிகளும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.