Thursday, October 30, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல்: இருவர் விளக்கமறியலில்

வைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல்: இருவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் திரைப்பட பாணியில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்து ஊழியரை தாக்கிய நபர் உட்பட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்றிரவு 10 மணியளவில் காயமேற்பட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்குள்
ஒருவர் நுழைந்துள்ளார்.

இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரை அச்சு இயந்திரத்தால் தாக்குவது கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது.

இதன்போது, காயமடைந்த வைத்தியசாலை ஊழியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வைத்தியசாலைக்குள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் மதுபோதையில் இருந்தததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்நபர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் ஜீன் 11 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles