Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்கொரோனாவை விட கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு

கொரோனாவை விட கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு

சீனாவின் ஹெபெய் (Hebei) மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலா (Ebola) வைரஸின் சில பகுதிகளைப் பயன்படுத்தி புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர்.

இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா உருவாக்கியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக அமையலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது .

சீன ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளனர். இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும்.

அதனால் இந்த வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா வைரஸின் பாதிப்பு அறிகுறி குறித்து ஆய்வு செய்வதே இதன் நோக்கம் என தெரிவித்த சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

அதேவேளை சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸினால் உலகத்திலுள்ள பல கோடி மக்கள் உயிரிழந்த நிலையில், மீண்டுமொரு வைரஸை உருவாக்கியுள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles