பப்புவா நியூ கினியாவில் தொடர் மழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்துள்ளன. இதனால் உறங்கிக்கொண்டு இருந்த பலர் அதில் சிக்கியுள்ளனர்.
இதனால் 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், 650க்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உதவ தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியாஇ பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.