Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுISIS பயங்கராவதிகள் தொடர்பில் வௌியான புதிய தகவல்

ISIS பயங்கராவதிகள் தொடர்பில் வௌியான புதிய தகவல்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளான நான்கு இலங்கையர்களுடன் தொடர்புடைய தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதனிடையே, நாட்டில் ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்களா என கண்டறிய பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளான இலங்கையை சேர்ந்த நால்வர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பில், அவர்களுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைக் கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சந்தேக நபரின் பல புகைப்படங்களை பொலிஸார் நேற்று (25) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என அடையாளங்காணப்பட்டுள்ள சந்தேகநபர், தெமட்டகொடை பிரதேசத்தில் வசிப்பவர், எனவும், சுமார் 05 அடி 06 அங்குலம் உயரமுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் 071-8591753 அல்லது பொறுப்பதிகாரி 071-8591774 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு 20 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனவும் தகவல் வழங்குபவரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒரு தொழிலாளி (நாட்டாமை) எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் அண்மையில் மாளிகாவத்தையில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 23ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 34 வயதுடைய நபரொருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவருடன் அக்குழுவினர் இந்தியா செல்வதற்கு முந்தைய நாள் அவர் தொலைபேசியில் பேசியதும், நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மீண்டும் ஆஜராகுமாறு குறித்த நபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நான்கு பேருக்கும் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மேலும், தற்போது குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் நாட்டினுள் இருக்கின்றார்களா என உறுதிப்படுத்துவதற்காக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் கவனம் செலுத்த வேண்டிய பட்டியலை முன்வைத்திருந்த போதிலும், பாதுகாப்பு தரப்பினர் அது குறித்து கவனம் செலுத்தவில்லை என பாதுகாப்புப் படைகளின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நான்கு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதன் பின்னர், அது குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பெயர்கள் அடங்கிய குழு தொடர்பில் கவனமாக இருக்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் குழுவுக்கு வலுவான அரசியல் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles