Thursday, September 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பின் பல முக்கிய வீதிகளுக்கு இன்றும் பூட்டு

கொழும்பின் பல முக்கிய வீதிகளுக்கு இன்றும் பூட்டு

கொழும்பை சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவும் மூடப்படவுள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடும் காற்றுடன் மரங்கள் முறிந்து விழுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பௌத்தாலோக மாவத்தை மலலசேகர சந்தியில் இருந்து தும்முல்லை சுற்றுவட்டம் வரையும், விஜேராம வீதி கிரிகோரி வீதி சந்தியிலிருந்து பௌத்தாலோக வீதி வரையும், பெரஹெர மாவத்தை ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தியிலிருந்து ரொட்டுண்டா சந்தி வரையும், பிரே புரூக் பகுதியும் இவ்வாறு மூடப்படவுள்ளன.

மேலும், வெசாக் வலயங்களுக்கு வரும் மக்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவிட்டு அந்த வலயங்களுக்கு நடந்து செல்ல முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனிடையே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார், கோரியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles