வெசாக் தினத்தன்று அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அனுமதிப்பத்திரம் இன்றி மதுபான போத்தல்களை வைத்திருந்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து மதுபானம் விற்று சம்பாதித்த பணமும் கைப்பற்றப்பட்டது.
குருநகர் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (23) விசேட அதிரடிப்படையின் யாழ்.முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வெசாக் போயா தினத்தன்று அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கான வைத்திருந்த 180 மில்லி லீற்றர் நிறை கொண்ட 25 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.