Thursday, September 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் பலி

தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்ஸிகோவில் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள புறநகர்ப்பகுதியில் நேற்று வீசிய பலத்த காற்றின் போது பிரசார மேடை சரிந்துள்ளது.

குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் Jorge Álvarez Máynez-இன் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையே இவ்வாறு சரிந்துள்ளது.

குடிமக்கள் இயக்கம் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

தனக்கு காயம் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் Jorge Álvarez Máynez தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles