Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பலி

கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது.

மாங்கேணியைச் சேர்ந்த 41 வயதுடைய அனஸ்டன் ஹாரலஸ் அலேசியஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 26 ம் திகதி மாங்கேணி தேவாலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு உயிரிழந்த நபர் வீட்டிற்கு சென்ற நிலையில் உறவினர்களுடன் குறித்த கடலில் சம்பவ தினமான நேற்று மாலை நீராடச் சென்று நீராடிய போது அவர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்த உறவினர்கள் மற்றம் மீனவர்களின் உதவியுடன் நீரில் மூழ்கி காணாமல் போனவரின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles