Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரம் வீழ்ந்ததில் இரு பெண்கள் பலி - ஒருவர் காயம்

மரம் வீழ்ந்ததில் இரு பெண்கள் பலி – ஒருவர் காயம்

சீரற்ற காலநிலை நிலை காரணமாக புத்தளம் – மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மாரவில – பிலாகமுல்ல பிரதேசத்தில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், நாத்தாண்டிய – உடுவல வீதியின் முட்டிபெதிவில பகுதியைச் சேர்ந்த யடவரகே தொன் ஹன்சி இஷாரா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாதம்பை குளியாபிட்டிய வீதியின் சுதுவெல்ல பிரதேசத்தில் மரமொன்று வீழ்ந்ததில் வீதியில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

தும்லசூரிய – உடலவெல பகுதியைச் சேர்ந்த நிசன்சலா சரோஜனி (வயது 38) என்பவரே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மாரவில மற்றும் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles