Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநோய் எதிர்ப்பு சக்தி ஊசி செலுத்தப்பட்ட நபர் மரணம்

நோய் எதிர்ப்பு சக்தி ஊசி செலுத்தப்பட்ட நபர் மரணம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், Cefuroxime என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

31 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் மரணம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் குமார விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை செலுத்தியதால் மரணம் நிகழ்ந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பதை விசாரணைகள் ஊடாக கண்டறிய முடியும் என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உயிரிழந்த நோயாளிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தின் வகை, ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் குமார விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles