அஹுங்கல்ல பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் நேற்று (22) சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.