Monday, April 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாணுக்குள் இருந்து கண்ணாடித்துண்டுகள் மீட்பு

பாணுக்குள் இருந்து கண்ணாடித்துண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில், சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றைய தினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது, பாணினுள் இருந்து உடைந்த போத்தல் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து அவர் முன்னெடுத்த விசாரணைகளில் கடைக்கு பாண் விநியோகம் செய்தது , சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் என தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது சுகாதார பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles