இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி இருந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த நால்வரும் இலங்கையில் வசித்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் கொழும்பில் வசித்ததாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் நேற்று முன்தினம் (20) இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.