Monday, April 21, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்து - 16 வயது சிறுவன் பலி

உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்து – 16 வயது சிறுவன் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் குழுவே இந்த விபத்தினை சந்தித்துள்ளது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் உழவியந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை வேகமாக சென்ற உழவியந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்ப முற்பட்டபோது பெட்டி கழன்று தடம் புரண்டுள்ளது

குறித்த விபத்தில் உழவனூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ர.மிதுசிகன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த இளைஞர்கள்புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் உடலம் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles