Sunday, October 12, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்களுக்கு ஐஸ் விற்பனை செய்த ஒருவர் கைது

மாணவர்களுக்கு ஐஸ் விற்பனை செய்த ஒருவர் கைது

மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருளை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த இளைஞன் பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர் புறத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சனிக்கிழமை(18) இரவு பெரிய நீலாவணை பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 2 கிராம் 360 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles