Monday, April 21, 2025
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிறந்த நாளன்று எமனை சந்தித்த யுவதி

பிறந்த நாளன்று எமனை சந்தித்த யுவதி

தனது பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.

வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.

புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் துவிச்சக்கர வண்டியில் குறித்த யுவதி பால் கொண்டு சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படவே செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளார்.

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles